6 ஆவது புத்தகத்திருவிழா – பெரம்பலூர் – 6th Permbalur Bookfair 2017

புத்தக திருவிழா

புத்தக திருவிழா புத்தகங்களை விற்பது மட்டும் அல்ல இதில் பல ஒப்பற்ற சேவைகள் நிறைந்து இருக்கிறது.

 

  1. உலகலாவிய பல தரப்பட்ட புத்தகங்கள் எளிதாக கிடைக்க வழிவகை செய்கிறது . ( 3000 த்திற்கும் மேற்ப்பட்ட தலைப்புகளில் 5,00,000 மேலான புத்தகங்கள் )
  1. ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கு இடையே பல சிந்தனையை தூண்ட கூடிய கவிதை , கட்டுரை ஓவியம் இன்னும் பல போட்டிகள் நடத்த பெற்று பரிசுகள் மாணவ செல்வங்களுக்கு வழங்க படுகிறது.
  1. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 25 தலைசிறந்த தமிழ் பேச்சாளர்கள் பங்கு பெற்று பல தரப்பட்ட தலையங்களில் பேசி மக்களை ஒவ்வொரு நாளும் சிந்திக்கவும் , சிரிக்கவும் வைக்கின்றனர்.
  1. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 3 பட்டிமன்றங்களாவது நடைபெற்று மக்களை மகிழ்விக்கிறது
  1. கல்வி , விவசாயம்,வேலை வாய்ப்பு, தொழில், மருத்துவம் என அனைத்து துறை சார்ந்த புத்தகங்களும் 10 % தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
  1. பள்ளி , கல்லூரி மாணவர்களின் திறனை வெளிபடுத்த ஒவ்வொரு நாளும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிது .
  1. மக்களுக்கு பண்டைய உணவுகள் கிடைக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் சிறுதானிய உணவகம் அமைக்கப்படுகிறது.
  1. புத்தக திருவிழா அரங்கில் மருத்துவ முகாம் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.இந்த ஆண்டு முதல் சித்த வைத்திய முகாமும் நடைபெற உள்ளது.
  1. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த விழா பொதுமக்கள்,ஆர்வலர்கள்,அரசு அதிகாரிகள், பதிப்பாளர்கள்,வியாபாரிகள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரின் கூட்டு முயற்சியில் நடை பெறுகின்றது.
  2. அனைவரையும் ஒன்றினைக்கும் ஒரு குடும்ப விழா தான் புத்தக திருவிழா.

      பெரம்பலூரின் புத்தகத்திருவிழா 5 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக 6ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, 27-01-2017 முதல் 05-02-2017 வரை நடைபெறவுள்ளது, இந்த பெருமைக்குறிய நிகழ்வை  தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியின் தாளாளர் உயர்திரு.ஆ.சீனிவாசன் அவர்களால் துவங்கிவைக்கப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.